விபத்தில் வலது கால் ஒன்றை இழந்த ராணுவ வீரருக்கு 1கோடியே 67 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு..

0 330
Stalin trichy visit

விபத்தில் வலது கால் ஒன்றை இழந்த ராணுவ வீரருக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு….

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் வயது 37. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார் – விடுமுறையில் மனைவியின் ஊரான திருச்சி மாவட்டம் குண்டூர் ராகவேந்திரா நகருக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பிய போது திருச்சி – புதுக்கோட்டை சாலையில் தனசேகரன் பாண்டியன் மீது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது.

இந்த விபத்தில் தனசேகரன் பாண்டியன் தனது வலது கால் ஒன்றை இழந்துவிட்டார் – ஆகையால் அவர் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் .பின்னர் விபத்தில் வலது காலை இழந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு தனசேகர பாண்டியன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ 1 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.