10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர்
10அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிராமத்தில் கைகாட்டி பகுதியில் நீளமான பாம்பு ஒன்று தரையில் கிடப்பதாக உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் நிலைய அலுவலர் (பொறுப்பு ) சங்கப் பிள்ளை தலைமையிலான மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அப்போது
சுமார் 10 அடி நீளத்தில் இறை முழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று அசைவற்ற நிலையில் கிடந்தது அதனை பாதுகாப்பாக பிடித்த தீயணைப்புத் துறையினர் துறையூர் வனச்சரகர் பொன்னுசாமியிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் பச்சைமலையில் உள்ள வனப் பகுதியில் மலைப்பாம்பை பாதுகாப்பாக விட்டனர்