ஆசனவாயில் மறைத்து கடத்திய 10 லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

0 342
Stalin trichy visit

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அப்போது பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்‌‌. இதில் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சோதனையில் செய்தனர்.

இதில் அந்த வாலிபர் ஆசனவாயில் மறைத்து 9.40 லட்சம் மதிப்புள்ள 19.3 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.