104 ஆண்டுகள் தொடர் கல்வி சேவையில் திருச்சி தேசிய கல்லூரி

0 319
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரி 1919 ஆம் ஆண்டு தொடங்கப்ப்டு 104 ஆண்டுகள் தொடர்ந்து கல்விச்சேவை செய்து வரும் நிறுவனமாகத் தேசியக்கல்லூரி விளங்குகிறது.
இந்த கல்லூரியின்‌ 104 ஆம் கல்லூரி விழா பத்மவிபூஷண்
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் என். எஸ். பிரசாத், தேசியக் கல்லூரியின்தோற்றப் பின்னணியையும் நோக்கங்களையும் எடுத்துக் கூறி, வரவேற்புரை ஆற்றி, சிறப்பு
விருந்தினரைக் கௌரவப்படுத்தினார்…

2022 – 2023 ஆம் கல்வியாண்டில் கல்வி, ஆராய்ச்சி,கலை, விளையாட்டு, சமூகப் பங்களிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தேசியக் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் நிகழ்த்திய சாதனைப் பட்டியலைக் கல்லூரி முதல்வர் (பொ.) முனைவர்
கி.குமார் ஆண்டறிக்கையாக வாசித்து அளித்தார்.

கல்லூரிச்செயலர் திருமிகு கா. ரகுநாதன்
இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் புதுச்சேரி ஆச்சாரியா குழுமக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வாவ் அகாடமி
நிறுவனர் முனைவர் ஜெ. அரவிந்தன் சிறப்பு விருந்தினரா கக்கலந்து‌ கொண்டார். அவர் தம் உரையில், இந்த தேசியக்கல்லூரி வரலாற்றுப் பாரம்பரியம்மிக்கது என்றும்,ஆங்கிலேயர்காலத்திலேயே நாட்டுப்பற்றுடன் தொடங்க பெற்ற இந்த கல்லூரியில் பயின்றோர் குடியரசுத்
தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் முதல் பல உயர் பதவிகளில் மக்கள் தொண்டு ஆற்றியுள்ளதை
நினைவு கூர்ந்தார். இன்றும் இக்கல்லூரி பல்வேறு துறைகளில்‌ சீரிய பணிகளைச் சிறப்பாகச்
செய்து வருவது குறித்துப் பெருமிதம் தெரிவித்தார். மேலும் கல்லூரியில் வெறுமென‌ படிப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை; கற்றுக்கொள்பவர்களே சாதனையாளர்களாக
மாறுகிறார்கள் எனக் கூறினார்.சிறப்புரையைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நல்ல மதிப்பெண்கள்
வாங்கிப் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவர்கள், பல்வேறு
திறன்சார் பிரிவுகளின் கீழ் 250 மாணவர்கள், கல்லூரியில்நிறுவப்பெற்றுள்ள
அறக்கட்டளைகளின் சார்பாக 90 மாணவர்கள், இக்கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகின்ற
எட்டு பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த நான்கு
பேரும், நூறு விழுக்காடு வருகைப்பதிவு பெற்ற ஒரு பேராசிரியர் உட்பட சுமார் 400 பேர்
பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசுகளையும், நூல் பரிசுகளையும்,
கேடயங்களையும் பெற்றனர். பரிசுப் பட்டியலை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்
ஸ்ரீராமச்சந்திரன் வாசித்தார்.
நிறைவாக, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் ஆர். இளவரசு நன்றி கூறினார்.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் நிகழ்ச்சியைத் தொகுத்து
வழங்கினார். துணைமுதல்வர்கள், தேர்வு நெறியாளர், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள்,
பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.