செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

0 411
Stalin trichy visit

திருச்சி ஏர்போர்ட் காமராஜ நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பழனி. கட்டிட தொழிலாளியான பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருண்(17). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பிற்காக தந்தை பழனியிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பழனி மறுத்துள்ளார்‌. இதனால் மனவேதனை அடைந்த அருண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஏர்போர்ட் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.