அன்னதானம் வாங்க முயன்றபோது 3 பெண்களிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு!

0 337
Stalin trichy visit

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் சமயபுரம் கோவில் தேரோட்டத்தையொட்டி பழூர் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. முருகேஸ்வரி அதனை வாங்கசென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை திருடி சென்றுவிட்டனர். இதேபோன்று கூத்தூர் பகுதியில் வழங்கப்பட்டஅன்னதானத்தை

பெறமுயன்ற முசிறி அருகே உள்ள ஆமூர் பகுதியை சேர்ந்த அமராவதி(வயது 48) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, பெரம்பலூர் மாவட்டம், நக்கச்சேலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் மனைவி தமிழரசி (வயது 55) என்பவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகு றித்து 3 பேரும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.