நடை பயணம் சென்ற 148 பேர் கைது
சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் முஸ்லிம்களும், தமிழின உணர்வாளர்களும் சிறையில் வாடுகின்றனர் என்றும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் சரீப் தலைமையில் திருச்சி பாலக்கரையில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் நேற்று தொடங்கியது. இதில் சிறிது தூரம் அவர்கள் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காந்தி மார்க்கெட் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் நடை பயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 148 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.