தெற்கு மாவட்டம் சார்பில் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்

0 180
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 13  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும்
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்.
தலைமை கழக அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி
பால்பண்ணை பேருந்து நிலையம் தஞ்சாவூர் ரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன்,  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் சபியுல்லா மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார், மற்றும் மாவட்ட , மாநகர, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் , கழக செயலாளர்கள் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், வட்ட, வார்டு, கிளைகழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.