திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடும் போட்டியில் 180 நபர்களுக்கு தங்கப்பதக்கம் – அசத்திய திருச்சி காவல் ஆணையர்…

0 37
National

திருச்சி மாநகரம் கே.கே.நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிளஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் 24.07.2022. ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது திருச்சி ரைபிள் கிளப்பில் முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள், என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (15 வயது வரை), யூத் (19 வயது வரை) ஜீனியர் (21 வயது வரை), சீனியர் (21முதல் 45 வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் ( 60 வயதுக்கு மேல்) தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டளர்.

24.07.2022-ந்தேதி முதல் 28.07.22-வரை நடந்த பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 28.07.2022-ந்தேதி பரிசுகள் வழங்கப்பட்டது. 29.07.22-ந்தேதி முதல் இன்று 31.07.22-வரை ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 31.07.22-ந்தேதி பரிசுகள் வழங்கப்பட்டது.
 

Click the image to Chat on Whatsapp

இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் S.R.ஜாங்கிட் இ.கா.ப., , திருச்சி மாநகர காவல் ஆணையர்G.கார்த்திகேயன்,  இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் Dr.D.V, சீத்தாராம ராவ் , திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இளமுருகள் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில், வெற்றிபெற்ற 192 நபர்களுக்கு தங்கம் பதக்கமும், 180 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும், 165 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆக மொத்தம் 537 வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இதில் சிறப்பம்சமாக திருச்சி மாநகர காவல் ஆணையர்  G.கார்த்திகேயள்,  0.22 ரைபிள் 50 மீட்டரிலும், 10 மீட்டர் ஏர் ரைபிளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். திருச்சி மாநகர காவல் ஆணையரை ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!