இலவச நூலகம் நடத்தி வரும் தம்பதியர்

0 84
National

திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு இலவச நூலகம் நடத்தி வருகிறார்கள். நூலகம் நடத்தி வருவது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

நூலகம் அறிவின் ஊற்று என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் “நூல் பல கல்” என்றும் “நூலளவே யாகுமாம் நுண்ணறிவு” என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மனித வாழ்வின் மான்பு எனப்படுவது. நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இதனை “புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது” என குறிப்பிடுவார்கள். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமானால் கல்வியிலும் அறிவிலும் மேன்மை பொருந்திய பிரஜைகள் அங்கு வாழ்வதனால் தான் இது சாத்தியமாகும்.

Click the image to Chat on Whatsapp

மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் இந்த நூலகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் எமது முன்னோர்களான அரசர்கள் தமது நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்
நம் அறிவு வளரவும்⸴ உயரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக நூலகங்களே முதன்மை பெறுகின்றன.

ஒவ்வொருவருக்கும் தமக்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடியாது
அறிவின் வளர்ச்சிக்கு நூலகம் இன்றியமையாததாகும். சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்களாக மாற்றியமைக்க நூல்கள் அவசியமானவை.அனைத்து நூல்களையும் மாணவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாது. குறிப்பாக ஏழை மாணவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க முடியாது. இதனால் அவர்கள் பயன் பெறுவதற்கு நூலகங்களின் துணை அவசியமாகும்.
நூல்களைப் படித்து பயன் பெற நூல் நிலையங்கள் இன்றியமையாதவையாகும். அதனாலேயே எங்களது இல்லத்தின் முகப்புப்பகுதியிலேயே நூலகம் அமைத்துள்ளோம்.

நூலகத்தில் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும்.
நூல்களை சேதப்படுத்தவோ கிழிக்கவோ கூடாது.படித்து முடித்த பின்னர் மீண்டும் உரிய இடத்தில் வைக்க வேண்டும்.
நூல்களை இலவசமாக படிக்கலாம். குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.

அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழியாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாக அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்கிறார்கள். அதனால் நூலகங்களில் அமர்ந்து படிப்பது குறைந்து வருகிறது அதே நேரங்களில் சிலர் பராமரிக்க இயலாத நூல்களை கொடுத்தும் வருகிறார்கள் என்றார்.
யோகா ஆசிரியர் விஜயகுமார்

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!