175 வழக்குகளில் பறிமுதல் செய்த 198 கிலோ கஞ்சா அழிப்பு

0 263
Stalin trichy visit

திருச்சி, ஏப். 25  திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு 

திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 வழக்குகளில் 2.150 கிலோ கிராம் கஞ்சா, புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 வழக்குகளில் 154.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கரூர் மாவட்டத்தில் 135 வழக்குகளில் 42.312 கிலோ கிராம் கஞ்சாவை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர்  அறிவுறுத்தலின்படியும் சரக குழுத்தலைவர் மற்றும் திருச்சிசரக காவல் துறை துணைத்தலைர் டாக்டர் வீ.வருண்குமார்  தலைமையில் குழு உறுப்பினர்களான திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திருச்சிளி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர்கள் முன்னிலையில் மேற்படி மூன்று மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட 175 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை நேற்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அயோத்திப்பட்டியில் உள்ள Medicare Enviro systems private limited நிறுவனத்திலுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.