திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியின் 19 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

0 595
Stalin trichy visit

திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியின் 19 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவ மாணவிகள் பயிற்சி மருத்துவர் பணியை முடித்து வெற்றிகரமாக மருத்துவர் பட்டம் பெற்றனர். இதில் 138 மருத்துவ மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றனர். இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர். அர்ஷியா பேகம் வரவேற்றார். முன்னாள் துணை முதல்வர். பிரபு இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவர்கள் அஷ்ரப், ஜமீர் பாஷா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவக் கல்வி இயக்குனர் பேராசிரியர் மருத்துவர் நாராயண பாபு அவர்கள் மருத்துவப் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:


மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்களாக பட்டம் பெறும் தாங்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும். வருங்காலத்தில் முதுகலை மருத்துவப் பட்டம் பயின்று மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக இருப்பதுடன் சமூகத்தில் அன்பும் சேவையும் கனிவும் கொண்ட நல்ல மருத்துவர் என்ற பெயரை பெற்றிட வேண்டும் என்றார்.
மருத்துவ பேராசிரியர்கள் பார்த்திபன், ஏகநாதன், ஞானகுரு, நசீர், ஆனந்தி, ஜோஸ்பின், சிவகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ மாணவர் மன்ற தலைவர் ரவீந்திரன், செயலாளர் சந்தோஷ், பொறுப்பாளர்கள் சிவஸ்ரீ, அபிராமி உள்ளிட்ட மாணவ-மாணவிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவர்கள ஹிப்போ கிரேட் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் இ . அருண் ராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.