நகை பட்டறை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது..

0 301
Stalin trichy visit

திருச்சி கள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40 ). இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சபரீஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சுண்ணாம்பு காரத் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது நகை பட்டறை அதிபர் டீக்கடைக்கு வந்துள்ளார். இதனை பார்த்த சபரீஷ் , சிவப்பிரகாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நகை பட்டறை அதிபர் பிரகாசை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் சந்து கடையை சேர்ந்த சபரீஷ், உறையூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.