இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
திருச்சி, மார்ச்.26 திருவரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார், அப்போது அங்கு மது போதையில் வந்த 2 பேர் கார்மேகத்தை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்மேகம் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 25 மற்றும் ராபர்ட் (வயது 48 )ஆகிய 2 பேரை கைது செய்தனர்.