வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
திருச்சி, மார்ச்.26 திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 52 ) கிராப்பட்டி பாலம் அருகே தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து எடமலைப்பட்டிபுதூர், ஆர்.சி நகரை சேர்ந்த சையது அபுதாகிர் (வயது 28) என்பவரை கைது செய்தனர், மேலும் அவரிடமிருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.