ஜவுளிக்கடையில் திருடிய 2 பேர் கைது

0 323
Stalin trichy visit

துவரங்குறிச்சி, சின்னசெட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 48). இவர் துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ந் ்தேதி இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள சேலை மற்றும் ஜவுளிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், மசினகுடியைச் சேர்ந்த நூர்முகமது (22), துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (26) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜவுளிக்கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து 4 சேலைகள் மற்றும் 2 ரெடிமேட் ஆடைகளை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.