பாதயாத்திரையை கையிலெடுத்த ப.சிதம்பரம்

0 271
Stalin trichy visit

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கூட இந்த உப்பு சத்தியாகிரக நினைவுப் பாத யாத்திரை நடைபயணத்தை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அருகே உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் ப.சிதம்பரம் பேட்டி.

1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் உப்பு சத்தியாகிரக நினைவுப் பாத யாத்திரை தொடங்கியது. அதை நினைவூட்டும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு ஸ்தூபியில் இருந்து பாதயாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார்கள்.மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்,
K. V. தங்கபாலு, ஈவி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய EVKSஇளங்கோவன் : இந்தி திணிப்பு கூடாது – ஒன்று பட்ட பாரதத்தை, மதத்தால், மொழியால், ஜாதியால் பிரிக்க முயல்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால்,ஒன்றுபட்ட ரஷ்யா உடைந்தது போல பாரதமும் உடையும். மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் மாநிலங்கள் தனி நாடாக சுக்கு நூறாகிவிடும் – இதனைத் தடுக்க ஆயுதம் எடுக்க வேண்டும் என்றால் எடுத்துதான் ஆகவேண்டும். தமிழக பண்பாட்டை பேணி காப்பவர்களுக்கு (EVKS ) ஜால்ரா என்ன மிருதங்கம் கூட வாசிப்பேன் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம்92 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த தண்டி யாத்திரை, இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியவில்லை என்றால் அது அவர்கள் தவறல்ல. உப்பு சத்தியாகிரகத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உப்பு ஒரு அடையாள பொருள். அதற்கு ஏன் வரி விதிக்கிறீர்கள்? என காந்தி கேள்வி எழுப்பினர். அரசுக்கு அதிகாரம் தருவது மக்கள்தான். கடற்கரை மணல் அரிக்கப்படுவது போல
மக்களின் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என சுதந்திர வேட்கையை பாரதி ஊட்டியதாக குறிப்பிட்டார். பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், இந்திய சுதந்திர வரலாற்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதை உணர்ந்து கொள்ள வேண்டும், இன்றும் நமது உரிமைகள் மீறப்படுவதுடன், மொழி, உடை, உணவு, பேச்சு, எழுத்து சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை உணர்ந்து இதனை எதிர்க்கும் வகையில் 92 வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் வளர்த்த போராட்ட உணர்வை மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணம் அமைந்துள்ளது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த நடைபயணம் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.