வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது

0 288
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தற்போது கடந்த சில நாட்களாக வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஏற இருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது அலி ஜின்னா(42) மற்றும் சென்னை மவுண்ட் ரோடு ஜான் முகம்மது தெருவைச் சேர்ந்த சையது உஸ்மான்(44) ஆகிய இருவரும் தங்கள் உடமைகளில் மறைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 450 சவுதி ரியால் வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததை அறிந்து பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.