குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 201 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை

0 277
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2. திருச்சி மாநகரத்தில் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத 201 வாகனங்கள் ரூ.12,83,918-க்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. திருச்சி மாநகர காவல்நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாதிருந்த 201 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யும் பொருட்டு விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, நேற்று திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், தலைமையில் கூடுதல் காவல் துணை ஆணையர், மற்றும் கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 197 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ – 2, 1, லாரி – 1 ஆக மொத்தம் 201 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. பின்னர், பொது ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களின் மொத்த விற்பனை தொகையான ரூ.12,83,918(வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும், இதுபோன்று திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை, விருப்பமுள்ளவர்கள் பொது ஏலத்தில் எடுத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.