குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 24 பேர் சிறையில் அடைப்பு

0 336
Stalin trichy visit

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தவர்களிடம் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி கடந்த 6 மாதங்களில் 491 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், அதனை மீறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 19 ரவுடிகள் உட்பட 24 நபர்களை திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால், மீதமுள்ள காலத்திற்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இவர்களில், 6 நபர்களுக்கு 300 நாட்கள் மேல் சிறைதண்டனையும், 13 நபர்களுக்கு 200 நாட்கள் மேல் சிறைதண்டனையும் மற்றும் 5 நபர்களுக்கு 200 நாட்களுக்குள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.