திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி தனது காலனியில் மறைத்து எடுத்த வந்த ரூ.28.67 லட்சம் மதிப்பிலான 603.500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.