முசிறி கோட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேர் கைது

0 205
Stalin trichy visit

திருச்சி, டிச. 17 முசிறி கோட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை.

முசிறி காவல் உட்கோட்ட பகுதிகளான முசிறி, தொட்டியம், துறையூர் , உப்பிலியபுரம், ஆகிய பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு நடைபெற்று வந்தது. இதையடுத்து
திருச்சி போலீஸ் எஸ். பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பகல் நேரத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடும் கும்பல் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருட்டு கும்பலை பிடிக்கும் நடவடிக்கையை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் நேற்று தனி படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முசிறி உழவர் சந்தை அருகில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர், அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து முசிறி காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ஊட்டியைச் சேர்ந்த ராஜா(42) , துறையூர் தாலுகா கோட்டப்பாளையம் சேர்ந்த சுரேஷ்(42) பெருமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணி(48) ஆகிய மூவர் என்பதும் முசிறி, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகள் மீட்க பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.