போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

0 132
Stalin trichy visit

திருச்சி, டிச.16  தேசிய தென்னிந்தியா நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு கரும்புக்கும், விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும், வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகப் பகுதியில் மேலாடையின்றி சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அய்யாகண்ணு

விவசாயிகள் விவசாயம் செய்யாவிட்டால் கார்ப்பரேட்டுகள் மரபணு மாற்றப்பட்ட விதை தருவார்கள் அப்படி தரும் விதையால் ஆண்கள் ஆண்மை இழக்க கூடும், பெண்கள் கருத்தரிக்க மாட்டார்கள். இந்த நிலைமை வராமல் இருப்பதற்காக தான் நாங்கள் டெல்லியில் சென்று போராட சென்ற போது காவல்துறையை எங்களுக்கு காலினை உடைக்கின்றனர்.

மழைக்காலத்தில் 25சதவீத ஈரம் பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். விவசாயிகளுக்கு வங்கிகளை கடன் தருவதில்லை விளைப் பொருள்களுக்கு உரிய விளையும் அரசு வழங்கவில்லை.

இதனைக் கண்டித்து காலை முதல் மேலாடை இல்லாமல் விவசாயிகளை காப்பாற்ற வலியுறுத்தி குளிரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி எங்களை சந்தித்து பேசினார். எங்களது கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றார். தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய உதவிகளை செய்து வருகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.