சமயபுரத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது

0 280
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2  திருச்சி மாவட்டம் சமயபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் நேற்று மாலை கத்தி முனையில் மிரட்டி பணத்தை வழிப்பறி செய்த மூன்று இளைஞர்களை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அய்யம்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர்கல்லூரி மாணவன்(17). இவர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை சமயபுரம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவன் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த திருச்சி எடமலைப்பட்டி புதூர் சொக்கலிங்கம் புரத்தைச் சேர்ந்த ரத்தினவேல் (21), அதே பகுதி இந்திரா நகரைச் சஞ்சய் (21) மற்றும் ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (20) ஆகிய மூன்று பேர் கத்தி முனையில் மிரட்டி கல்லூரி மாணவரிடம் இருந்த ரூ. 250 பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரூ. 250 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.