குடும்ப பிரச்சினையில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை

0 256
Stalin trichy visit

திருச்சி ஆக 15  திருச்சி கே கே நகர் இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது51) இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 43. ) மகேஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த 13 ந்தேதி பரமேஸ்வரி அவரை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் திருச்சி திருவரங்கம் காந்தி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது32). இந்த நிலையில் ராஜேஷுக்கு ஆட்டோ ஓட்டுவதில் சரியான வருமானம் இல்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 13 ந்தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.