மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் உயிரிழப்பு
திருச்சி, அக். 5 திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர்கோவில் பூசாரிபட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்பவர் ஒரு பசு மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகள் வளர்த்து வந்த நிலையில் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்துள்ளார்.
இரவு 10 மணியளவில் பலத்த இடிமின்னலுடன் மழை பெய்த நிலையில் வீட்டின் அருகே மின்னல் தாக்கியதில் அவர் வளர்த்து வந்த ஒரு பசுமாடு மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகள் நிகழ்விடத்திலையே சுருண்டுவிழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த பாக்கியம் 3 மாடுகளும் கீழே விழுந்து கிடந்ததைப்பார்த்து அதனை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் மாடுகள் அனைத்தும் உயிரிழ்ந்துவிட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இந்நிலையில் பாக்கியம் தனது வாழ்வாதாரமாகவும் குழந்தைகள் போல் வளர்த்து வந்த மாடுகள் இறந்ததால் வேதனையுடன் மாடுகளை கட்டித்தழுவி கதறிய அழுதது அனைவரையும் கண்கலங்கச்செய்தது.
சம்பவ இடத்திலேயே கால்நடை மருத்துவர் மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை செய்தனர். வாழ்வாதாரமாக இருந்த மாடுகள் இறந்ததால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.