துறையூர் அருகே கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து

0 343
Stalin trichy visit

திருச்சி, அக். 5 திருச்சி மாவட்டம்,  துறையூர் அருகே வெங்கடேசபுரம் சாலையில் கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயம் இன்றி உயிர் தப்பினார்.

துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான் பட்டியில் இருந்து முருகூர் செல்லும் பாதையில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணிக்காக கான்கிரீட் கலவையை ஏற்றி கொண்டு லாரி ஒன்று துறையூரிலிருந்து வெங்கடேசபுரம் வழியாக கலிங்கமுடையான் பட்டி நோக்கி சென்றது.
கான்கிரீட் கலவை லாரியானது வெங்கடேசபுரம் சாலையில் உள்ள வித்யா மந்திர் பள்ளி அருகே சென்றபோது. எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக லாரியை சாலையோரம் ஓட்டியுள்ளார். அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக சாலை ஓரத்தில் சேரும் சகதியுமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உடனடியாக லாரியில் இருந்து குதித்த ஓட்டுனர் திருச்சி கீரமங்கலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் நல்வாய்ப்பாக காயம் இன்றி உயிர்த்தப்பினார். இந்தச் சாலையானது மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பலமுறை புகார் அளித்தும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.