திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் சின்ன கோனார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் இரவது (14) வயது மகள் பூலாங்குடி காலனியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அவர் அரசு பஸ்சில் சூரியூரில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்லுகிறார். இந்தநிலையில் இலந்தப்பட்டியை சேர்ந்த மகாமுனி மகன் பாலமுருகன் (வயது 23), வீரையன் மகன் சிவா(வயது 20) தவசி மகன் ஜெய்சங்கர் (எ) சேகுட்டி(வயது19) ஆகிய மூன்று பேரும் கேலி செய்துள்ளனர். இதனை
அதே பள்ளியில் படிக்கும் 15 வயதான அந்தப் மாணவியின் அண்ணன் தனது தங்கையை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாலமுருகன், சிவா, சேகுட்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அந்த மாணவி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், சிவா, சேகுட்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.