3 மாதத்தில் 39 ரவுடிகள் குண்டாசில் அடைப்பு; மக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை!

0 303
Stalin trichy visit

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் திருச்சி மாநகரில் மட்டும் 39 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குற்றச்சம்பவங்கள் மற்றும் கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் சென்னையில் நடந்த சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி

தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மற்ற மாவட்டத்தை விட திருச்சி மாநகரில் 3 மாதத்தில் மட்டும் 39 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர். தொடர்ந்து திருச்சி மாநகர மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.