பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

0 319
Stalin trichy visit

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே வேடுவர் தெருவில் சிலர் பணம் வைத்து சூதாடிய செஷன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40), சலீம் (39), தங்கபாண்டி (28), சதீஷ் (30) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.