திருவெறும்பூரில் தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் அமைக்க கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
திருவெறும்பூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்ன துரை தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த மாநாடு கூட்டத்தில் மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில், திருவெரும்பூர் கடை வீதி பகுதியில் தொடர் விபத்துகள் தடுக்கும் வகையில் பாலம் அமைத்திட வேண்டும். 15 ஆண்டுகள் மேலாகியும் திருவெறும்பூர் தாலுகாவில் அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம் மற்றும் நீதிமன்றம் அமைத்திட வேண்டும்.
மாநில அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்கிட வேண்டும் என்பன உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த மாநாடு கூட்டத்தில் நடராஜன், சங்கிலி முத்து உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.