திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொணலையில் உள்ள மலைமாதா கோவில் அருகே ஒரு காதல் ஜோடி தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனியாக காதல் ஜோடி பேசிக்கொண்டிருப்பதை கண்ட சமயபுரம் அருகே உள்ள கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவரிராஜ் என்பவர் மகன் ஸ்டீபன் (வயது 33) என்பவர் சமயபுரத்தில் இருக்கும் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல்
தெரிவித்து அவர்களை அங்கு வருமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த காதலர்கள் இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செயின் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர்களை தேடினர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் இருந்த ஸ்டீபன் மற்றும்
சமயபுரத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேரையும் பிடித்த கைது செய்த 1.போலீசார் சிறுகனூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். காதலர்கள் லால்குடி அருகே உள்ள வெள்ளனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், காதலி சமயபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.