திருச்சியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

0 415
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18 திருச்சி  – திண்டுக்கல் சாலையில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, செசன்ஸ் கோர்ட் போலீசார் நேற்று திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாறு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் ராம்ஜி நகர், புங்கனூரைச் சேர்ந்த சசிதரன் (வயது47), தாராநல்லுார், பூக்கொல்லை தெருவைச் சேர்ந்த முகமது ஜாவித் (வயது19), மணச்சநல்லூர், பூனாம்பாளையத்தை சேர்ந்த கிரிதரண் (வயது19) மற்றும் உறையூர் நாடார் தெருவைச் சேர்ந்த அப்தூல் காதர் (வயது19) என்பதும், இவர்க்ள 4 பேரும் அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்த செஸன்ஸ் கோர்ட் போலீசார், அவர்களிடமிருந்து 2 கிலோ 460 கிராம் மதிப்புள்ள கஞ்சா, 2 பைக்குகள் மற்றும் பணம் ரூ.30 ஆயிரம் உள்ளிட்டவட்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.