இடி மின்னல் தாக்கியதில் 4 மாடுகள் உயிரிழப்பு

0 287
Stalin trichy visit

திருச்சி, ஏப்.3 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனது சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு தேவையான வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்வது போல் மின்னல் காணப்பட்டுள்ளது. மாட்டின் பட்டிக்கு அருகே ராஜீவ் காந்தி சென்ற போது திடிரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் சத்தம் கேட்டபோது தனது மாட்டுபட்டியின் மீதும், மரம் மற்றும் வைக்கோல் மீது தீ பிடித்து எரிந்துள்ளது. ராஜீவ் காந்தி அருகே சென்றபோது 4 மாடுகளும் மின்னல் தாக்கிய போது உயிரிழந்தது தெரியவந்தது. அதேபோல் பாலமுருகன் என்பவரது வைக்கோல் போரும் தீப்பற்றி எரிந்தது.  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைக்க போராடி உள்ளனர்.

 

இது குறித்து புள்ளம்பாடி தீயணப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு பொறுப்பு நிலைய அலுவலர் பாரதி தலைமையில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரைண நடத்தி வருகின்றனர். இடி மின்னல் தாக்கி பலியான மாடுகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றின் மதிப்பு ரூ 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.