திருச்சியில் 3 பெண்கள் உள்பட 4 பேர் மாயம்

0 1,820
Stalin trichy visit

திருச்சி, ஏப் 18 திருச்சியை அடுத்த லால்குடி, மாந்துரை, புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் மனைவி ரேவதி (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாலச்சந்தர் இறந்துவிட்டார். ரேவதி ஏர்போர்ட், சந்தோஷ் நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப். 12ம் தேதி வீட்டைவிட்டு சென்ற ரேவதி மாயமானார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

திருச்சி, திருவானைக்கோயில், நெதாஜி தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது69). இவரது மனைவி கிருஷ்ணவேனி (வயது59). இவர்களுக்கு 2 வாரிசுகள் உள்ளனர். கடந்த ஏப். 14ம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டைவிட்டு சென்ற கிருஷ்ணவேனி மாயமானார். இது குறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

இதே போன்று. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது54) இவரது மகள் பிரியதர்ஷிணி (வயது20), திருச்சி, மேலசிந்தாமணியில் உள்ள கல்லுாரியில் விடுதியில் தங்கி 3ம் ஆண்டு இளநிலைபட்டம் படித்து வருகிறார். கடந்த ஏப். 16ம் தேதி விடுதியில் இருந்து கல்லூரி சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாணவி தந்தை அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருச்சி, புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயா (வயது51). இவரது மகன் பழனிவேல் (வயது32), மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இந்நிலையில் ஏப். 14ம் தேதி வீட்டில் இருந்து சென்ற இவர் மாயமானார் இது குறித்து அவரது அந்தை அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.