கே.கே.நகரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 335
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18 திருச்சி, கே.கே.நகர் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது30). இவரது மனைவி தவசுமணி (வயது23), பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர், இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப். 16ம் தேதி தவசுமணி உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பிரபு வீட்டின் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இது குறித்து தவசுமணி அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.