ஸ்ரீரங்கம் கோவிலில் 44 லட்சம் உண்டியல் காணிக்கை!

0 429
Stalin trichy visit

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இங்கு மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ன செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

 

ஸ்ரீரங்கம் உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 44,93,020-இலட்சமும், தங்கம் 94 கிராமும், வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய்தாள்கள் கிடைக்கப்பெற்றன.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.