திருச்சி காந்தி சந்தை அருகே உள்ள காலி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் காய்கறி சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு காய்கறி மூட்டைகள் ஏற்றி இறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை அங்கு நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த பழைய மினி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் பழக் கூடைகளை அப்புறபடுத்தினர். ஆயினும் மளமள என பரவிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கபளீகரம் செய்தது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆட்டோ வேன் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo