முசிறி பேருந்து நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு

0 343
Stalin trichy visit

முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 30). இவரது மனைவி சுசிலா. பார்த்திபன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் திருச்சி வழியாக துறையூருக்கு வந்தார். துறையூரில் இருந்து தனது மனைவி ஊரான சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கந்தசாமிபுதூர் செல்வதற்காக சேலம் செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். அங்கு பையை வைத்துவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கிய அவர் பஸ் நிலையத்தில் பழம் வாங்கிக்கொண்டு மீண்டும் பஸ்சில் ஏறியதாக தெரிகிறது. பஸ்சில் வைத்திருந்த பையை பார்த்தபோது, பை திறந்த நிலையில் இருந்ததாகவும் பையில் இருந்த 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தோடு, முக்கால் பவுன் தோடு உள்பட சுமார் 5 பவுன் நகை மற்றும் ஆதார் அட்டை, ஏ.டி.எம். அட்டை வைத்திருந்த பர்ஸ் ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் துறையூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கூறுகையில், துறையூர் பஸ் நிலையத்தில் போலீசாருக்கு தனி கட்டுப்பாட்டு அறை உள்ளது. அந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தும் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் பஸ் நிலையத்தில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. துறையூர் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வேண்டும். செயலிழந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய வேண்டும். பஸ் நிலையம் முழுவதும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின் விளக்குகள் உள்ளது. மற்ற இடங்களிலும் மின்விளக்குளை எரிய செய்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.