காரில் கடத்திய 50 மூட்டை குட்கா பறிமுதல்

0 360
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் எதுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே குட்கா பொருட்களை கடத்தி வந்த காரை நிறுத்திவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம். 50 மூட்டை குட்கா பொருள்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர் .

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ காரை சோதனை செய்வதற்காக போலீசார் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் பேரி கார்டை இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த துறையூர் போலீசார் வாகனங்களில் காரை பின்தொடர்ந்தது விரட்டிச்சென்றனர்.

போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த காரில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் எதுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து துறையூர் போலீசார் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். காரில் 50 மூட்டைகளில் குட்கா பொருள்களை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து முசிறி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.