56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

0 274
Stalin trichy visit

56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி பெரியகடை வீதி, ராணி தெருவில் உள்ள சீனிவாசன த/பெ.கண்ணன்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக  இன்று 31.05.2023 கிடைத்த இரகசிய தகவவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், பாண்டி, ஸ்டாலின், அன்புச்செல்வன் பொன்ராஜ், இப்ராகிம் மற்றும் மகாதேவன் கொண்ட குழுவால் அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது சுமார் 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் 9 கைபேசியும் மற்றும் ரூபாய் 6,57,320/- (ஆறு இலட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரத்தி முன்னூற்றி இருபது) ரொக்கம் மற்றும் கடைகாரர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக 227 கிராம் வெள்ளி நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் உயர்திரு.நிவேதாலெட்சுமி மற்றும் கோட்டை ஆய்வாளர் உயர்திரு.தயாளன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களில் வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது பதுக்கி வைப்பதோ போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். மேலும் அந்த நபர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கூறினார்.

இதுபோன்ற பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகார் எண் : 99 44 95 95 95 95 85 95 95 95

மாநில புகார் எண் :

9444042322

 

Leave A Reply

Your email address will not be published.