திருச்சி சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 59 காவல்துறையினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் : டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கினார்

0 398
Stalin trichy visit

திருச்சி மாநகரம் மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி அலகு ஆகியவற்றில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் 12ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று உயர்கல்வி படிப்பதற்குத் தயாராக உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள கலையரங்கத்தில் இன்றைய தினம் (08.07.2022) நடைபெற்றது. இதில் 260 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காவல் படைத் தலைவர் டாக்டர்.சி. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்  கலந்து கொண்டார். மேலும் பல்வேறு வகையான உயர்கல்வி படிப்புகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்குவதற்காக கல்வித்துறையைச் சார்ந்த நிபுணர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பேசிய காவல்துறை தலைமை இயக்குநர் மாணவ, மாணவியர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து படித்து அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கு ஊக்கப்படுத்தி தேவையான அறிவுரைகளை வழங்கினார். மேலும், துறை சார் நிபுணர்கள் உயர்கல்வியில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்தும், அவற்றை படிப்பதற்கான சிறந்த கல்லூரிகள் குறித்தும், எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் திரு. சந்தோஷ்குமார் , காவல்துறை தலைவர் மத்திய மண்டலம்,  கார்த்திகேயன் , திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக காவ்லதுறை தலைமை இயக்குநர்  திருச்சி சரகத்திற்குட்பட்ட உள்ள காவல் கண்காணிப்பாளர்களுடன் அந்தந்த மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், திருச்சி சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 59 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வெகுமதியும், பாராட்டு சான்றிதழும் வழங்கி அவர்களை மேலும் சிறப்பாக பணிபுரிய ஊக்கப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.