திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு கடத்த இருந்த ரூ.6.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

0 373
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த நவாஸ்கான்(37) என்பவரிடம் ரூ.2.2 லட்சம் மதிப்பிலான ரியால், திருச்சியைச் சேர்ந்த முகமது இசாக்(27) என்பவரிடம் ரூ.2.34 லட்சம் மதிப்பிலான ரியால், சென்னை புதூரை சேர்ந்த பீர் முகமது(43) என்பவரிடம் ரூ.2.28 லட்சம் மதிப்பிலான ரியால் என வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததாக வெளிநாட்டு பணம் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.6.82 லட்சம் என தெரியவருகிறது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.