திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

0 258
Stalin trichy visit

திருச்சி ஆக11- திருச்சி முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தாயுமான் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது முடுக்கு பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30)என்ற வாலிபர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 75 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே போல் திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் டீ ஸ்டால் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி பாலக்கரை காஜா பேட்டை அரச மரம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஜஸ்டின் ஜேசுராஜ் (வயது 26) காஜா பேட்டை அண்ணா நகரை சேர்ந்த ஆஷிக் (வயது 20) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல் பாலக்கரை கீழப்புதூர் டீக்கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த
நித்தீன் ( வயது 24) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட ஐந்து பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.