புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெண் கைது
திருச்சி ஆக11 – திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது இபி ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி காயத்ரி (வயது 38) என்பதும், இவர் தான் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய இருந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்துஓட்டை போலீசார் காயத்ரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.