திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் காரைக்காலில் இருந்து நாகை வந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் கழிவறையில் கேட்பாரின்றி புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 61 இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.