கேட்பாரின்றி கிடந்த 62 மதுபாட்டில்கள் பறிமுதல்!

0 297
Stalin trichy visit

காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.ஐ. முருகானந்தம் மற்றும் போலீசார் மணிமாறன், பிரபு அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் 2 பைகள் கேட்பாரின்றி இருந்தன. சந்தேகத்தின்பேரில்

அந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் 62 மதுபாட்டில்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை கைப்பற்றி திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மது பாட்டில்களை கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.