திருச்சி மாவட்டத்தில் நாளை 631 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் நாளை ஊரக பகுதிகளில் 505 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 126 முகாம்களும் என மொத்தம் 631 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார்அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமுக்கு சென்று தடுப்பூசியை செலுத்தி கொண்டு கொரோனா நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.