ஆடிப்பெருக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாளை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் மக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா .பிரதீப் குமார்,இன்று (2.8.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் டாக்டர் .ஆர். வைத்திநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு. நித்தியானந்தம், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை
அலுவலர்கள் உடனிருந்தனர்.