போதை மாத்திரை விற்பனை செய்த 7 பேர் கைது
திருச்சி செப். 8 திருச்சி சிந்தாமணி பகுதி வெனிஸ் தெரு அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து போலீசார சோதனை நடத்தினர் அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர் இதில் அவர்கள் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நசுருதீன் (வயது26) ,அஜய் (வயது26), முகமது அப்துல்லா (வயது 28, )திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது27) சர்க்கார் பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்கி (வயது20, திருச்சி கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (வயது19) நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அங்கு போதை மாத்திரை விற்றதும் தெரிந்தது.
இதையடுத்து அந்த 7 வாலிபர்களையும போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 290 போதை மாத்திரைகள் மற்றும் 10 மருத்துவ ஊசிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.